இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள், மடிக்கணினி என அதிகமான சலுகைகள் செயல்படுத்தப்படுகின்றன என்று அமைச்சர் சுந்தரராஜ் கூறினார்.
ராமேசுவரத்தில் உள்ள எஸ்.பி.ஏ. பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள், மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மாணவி களுக்கு இலவச சைக்கிள்கள், மடிக்கணினிகளை வழங்கி அமைச்சர் சுந்தரராஜ் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–
தமிழகத்தின் சாதனை
தமிழகத்தில் மக்களுக்காகவும், மாணவ– மாணவிகளுக்காகவும், பல்வேறு நல்ல திட்டங்களை முதல் அமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். தமிழகத்தில் மட்டும் 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டை வைத்துள்ள பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல்வர் அம்மா மட்டும் தான் பள்ளி மாணவ– மாணவிகளுக்கு காலணிகள், சீருடைகள், சைக்கிள்கள், மடிக்கணினிகள் என அனைத்து பொருட்களையும் இலவசமாக வழங்கி சலுகைகளை நிறைவேற்றி வருகிறார். ராமேசுவரம் பகுதியில் கடற்கரை சாலை அமைப்பது குறித்து தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதுபோல் ராமேசுவரம்– தனுஷ்கோடி இடையே 18 கோடி மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மடிக்கணினி, சைக்கிள்கள்
விழாவில் பிளஸ்–2 மாணவிகள் 247 பேருக்கு அரசின் விலையில்லா மடிக் கணினிகள், 230 மாணவி களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. விழாவில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் முனியசாமி, கோவில் இணை ஆணையர் செல்வராஜ், நகர் செயலாளர் பெருமாள், நகரசபை தலைவர் அர்ச்சுணன், துணைத்தலைவர் குணசேகரன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், வீட்டு வசதி சங்க தலைவர் கே.கே.அர்ச்சுணன், துணைத்தலைவர் பி.என்.எஸ்.ஸ்ரீகாந்த், அண்ணா தொழிற் சங்க தலைவர் அண்ணாதுரை, செயலாளர் ராதா, முதன்மை கல்வி அதிகாரி சிவகாமசுந்தரி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், தலைமையாசிரியர் சந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment