Saturday, 28 September 2013

தூத்துக்குடி மாவட்ட அளவிலான செஸ் போட்டி கலெக்டர் ம.ரவிகுமார் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட அளவிலான செஸ் போட்டியை மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் தொடங்கி வைத்தார்.
செஸ் போட்டி
சென்னையில் அடுத்த மாதம் உலக செஸ் சாம்பியன் விசுவநாதஆனந்துக்கும், நார்வே நாட்டின் கார்ல்சன் ஆகியோர் இடையே உலக செஸ் சாம்பியன் போட்டி நடக்கிறது. இந்த போட்டியை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு செஸ் கழகம், தூத்துக்குடி மாவட்ட செஸ் கழகம் இணைந்து மாவட்ட அளவிலான செஸ் போட்டியை தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடத்தியது.
இந்த போட்டி தொடக்க விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். கல்லூரி செயலாளர் சி.எஸ்.ராஜேந்திரன், முதல்வர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பரிசளிப்பு விழா
இந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 328 பேர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் 10 பேர் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளலாம். இதற்கு பரிசுத்தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்பட உள்ளது. மேலும் போட்டியில் வெற்றி பெறும் 10 பேர் சென்னையில் நடைபெறும் உலக செஸ் போட்டியை இலவசமாக பார்ப்பதற்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.
போட்டிகள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசளிப்பு விழா நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட செஸ் கழக செயலாளர் ஜான் பி.எஸ்.டெமல், பொருளாளர் ஜெயசீலன் ரத்னம் ஆகியோர் செய்து இருந்தனர்.

No comments:

Post a Comment