Saturday, 28 September 2013

நெல்லையில் வெயில் டிகிரியை தாண்டியது

பொதுமக்கள் கடும் தவிப்பு


நெல்லையில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

கருத்துகள்

நெல்லையில் கடந்த 4 தினங்களாக வெயிலின் உக்கிரம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திர கோடை காலம் போல் காலை 10 மணிக்கே வெயில் சுட்டெரிக்கிறது. நேரம் செல்லச் செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது. நேற்று பிற்பகல் 1 மணிக்கு வெயில் 100 டிகிரியை கடந்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் தவித்தனர். இதனால், குளிர்பானங்களின் விற்பனை களை கட்டியுள்ளது. காற்றும் குறைந்ததால் புழுக்கம் அதிகமாக உணரப்பட்டது. வெயில் அதிகரிப்பு மற்றும் காற்று குறைவு காரணமாக, குளிர் சாதனங்களின் உபயோகம் அதிகரித்தது. இதனால் மீண்டும் மின்தடை தலைதூக்கியுள்ளது. நேற்று அதிகாலை முதல் பல இடங்களில் மின்தடை செய்யப்பட்டது.
நன்றி : தினகரன்.

No comments:

Post a Comment