Saturday, 28 September 2013

கொடுப்பதில் மகிழ்வடையும் வாரம்: பள்ளிகளில் கொண்டாட உத்தரவு

 சென்னை

First Published : 29 September 2013 12:57 AM IST
மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தை மாணவர்களிடம் தூண்டும் வகையில் பள்ளிகளில் "கொடுப்பதில் மகிழ்வடையும் வாரம்' கடைபிடிக்க அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தை மாணவர்களிடம் உருவாக்க, கொடுப்பதில் மகிழ்வடையும் வாரத்தை (அக்.2 முதல் 10 வரை) பள்ளிகளில் கொண்டாட தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த 7 நாள்களிலும் மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டிய நடவடிக்கைகள் குறித்து
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அவர் சுற்றறிக்கையையும் அனுப்பியுள்ளார்.
மாணவர்கள் தங்களது வசிப்பிடங்களுக்கு அருகில் வாழும் ஏழைகளுக்கு இயன்ற பரிசுப் பொருள்களை வழங்குதல், எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு கற்பித்தல், பயணத்தின் போது பெரியவர்கள், உடல் நலம் குன்றியவர்களுக்கு இடம் வழங்குதல், சாலையைக் கடக்க உதவி செய்தல் போன்றவற்றை மாணவர்கள் கடைப்பிடித்தல் தொடர்பாக தலைமையாசிரியர்கள் அறிவுரைகளை வழங்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

  1. மாணவர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நல்ல முயற்சி

    ReplyDelete